நான் 1995 ம் ஆண்டில் துவங்கி ஒரு சிறிய ட்ரஸ்ட் நடத்தி வந்தேன். யாரிடமும் எந்த வித உதவியும் கேட்காமல் என்னுடைய சொந்த தொகை ஆகிய அந்த டிரஸ்ட்டின் corpus fund ல் இருந்து வந்த வட்டி தொகையில் (சில ஆயிரங்கள்) வருடா வருடம் institutions for physically challenged , visually challenged மற்றும் orphanages களுக்கு உதவிகள் செய்து வந்தேன்.
இரண்டு வருடங்களுக்கு முன் என்னுடைய CA ட்ரஸ்ட்களுக்கான புதிய சட்ட திட்டங்கள்படி , formalities அதிகம் , மிகச் சிறிய ட்ரஸ்ட் நடத்துவது கடினம் என்று அறிவுரை கூறினார். சட்டப்படி இந்த corpus fund ஐ ஒரு பெரிய அளவில் சிறப்பாக இயங்கி வரும் ட்ரஸ்ட்க்கு transfer செய்து விட வேண்டும் என்று கூறினார்.
2020 ம் ஆண்டு இறுதியில் சென்னையில் அற்புதமான மனிதர் உயர்திரு இராதாகிருஷ்ணன் அவர்களை பற்றி கேள்விப்பட்டு நேரில் சந்தித்து சில மணி நேரங்கள் பேசினேன்.
அவர் தன் மனைவியின் நினைவாக நடத்தி வரும் ஶ்ரீமதி ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் சாரிடபிள் ட்ரஸ்ட் பற்றியும் அதன் மூலம் வருடம் முழுவதும் தொடர்ந்து நடக்கும் எண்ணற்ற உதவிகளை பற்றியும் அறிந்து கொண்டேன். அவரது எளிமை மற்றும் முழு நேர ஈடுபாடு இவற்றை பார்த்ததும் என் டிரஸ்ட்டின் முழு corpus fund ஐயும் அவர் டிரஸ்ட்டுக்கு அளித்தேன்.
அதன் பிறகு அவர் ட்ரஸ்ட் நடத்தும் பல்வேறு பணிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என் மனைவி, பையனிடமும் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உறவினர்களிடமும் அந்த டிரஸ்ட்டிற்கு நிறைய நன்கொடைகளை பெற்றுத் தந்தேன்.
மதுரையில் நான் நேரில் சென்று பார்வையிட்டு முறையாக இயங்குகிறது என்ற எனது பரிந்துரையை ஏற்று சில ஆதரவற்ற முதியோர்கள் இல்லங்களில் உள்ள நூற்றுக் கணக்கானவர்களுக்கு பல நாட்கள் அன்னதானம் மற்றும் நிறைய பேருக்கு புத்தாடைகள் அவரது ட்ரஸ்ட் மூலமாக பெற்றுத் தந்தேன். ஒரு orphanage க்கும் உதவிகள் வழங்கினோம்.
இரண்டு பள்ளி நூலகங்களுக்கு உதவிகளும் , மிகவும் வறுமையில் உள்ள நன்றாக படிக்கும் மாணவர்கள் சிலருக்கும் கல்வி கட்டணங்களும் வழங்கப்பட்டது.
எல்லா நிகழ்வுகளிலும் ட்ரஸ்ட் பிரதிநிதியாக கலந்து கொண்டு பலரின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறும் நல்ல வாய்ப்பும் புண்ணியமும் கிடைத்தது.
பணி ஓய்வுக்குப் பின் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழலில் இருக்கும் பலருக்கு உதவும் ஒரு சிறப்பான, மன நிறைவு தந்த வாய்ப்பு மதுரை
ஶ்ரீ மீனாட்சி அம்மன் சமேத
ஶ்ரீ சுந்தரேஸ்வரர் அருளாலும்
திரு இராதாகிருஷ்ணன் ஜி அவர்களின் முழு நம்பிக்கையாலும் கிடைத்துள்ளது.
இது போன்ற பணிகள் இன்னும் சிறப்பாக செய்திடும் வாய்ப்பு எம்பெருமான் பேரருளால் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
ஓம் நமசிவாய !
ஓம் நமோ நாராயணாய
Ananthanarayanan Venkat, Trust’s well wisher/Volunteer in Madurai posted in his Facebook today